மன்னிக்கவும் மக்களே! தவிர்க்கமுடியாத , சொல்ல இயலாத சில பல சொந்த அசௌகரிய காரணங்களால் , இந்த தளத்தில் புதிய வரன் பதிவுகள் எதுவும் செய்ய இயலவில்லை. ஒரு நீண்ட (ஏப்ரல் 30, 2022 வரை) நான்கு மாத இடைவெளி தேவைபடுகிறது. அதர்க்குப்பின் , தடையில்லாமல் புதிய பதிவுகளுடன் இந்த கட்டணமில்லா இலவச வரன் பதிவு சேவை நிச்சயம் மேம்படுத்தப்பட்ட புதிய வசதிகளுடன், தொடரும்...

நான் பயன்படுத்தி வந்த ஆன்ட்ராய்ட் திறன்பேசி (android smartphone), கடந்த வாரம் செயலிழந்து செத்துவிட்டது 😝.. அதனால் whatsapp ல் என்னை தொடர்புகொள்ள வேண்டாம். வேறொரு திறன்பேசி (smartphone) வாங்கவோ, பயன்படுத்தவோ கூடாது என்பதிலும், மேலும் whatsapp, facebook, instagram போன்ற மனித நேரத்தையும், திறனையும் வீணாக்கும் செயலிகளை பயன்படுத்துவதையும் , அது நம்மிடம் இருந்து திருடும் தனிநபர் தகவல்களை கொடுப்பதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து, கடந்த இரண்டு வருடம் முன்பு, இதே போன்று 2020 ம் புத்தாண்டு துவங்கும் சமயம், 2019 டிசம்பரில் தனிநபர் தகவல் பாதுகாப்பு முதன்மையாக்கும் தீர்மானம் Making Privacy Primary Resolution என்பதை தெளிவான சிந்தனையுடனும் , முழுமணதோடும் தீர்மானம் எடுத்துக்கொண்டேன். ஆனால் smartphone இல்லாமல் வாழும் வாழ்க்கைக்கு என்னை தயார்படுத்தி , நான் பயன்படுத்தி வந்த செயலிகளிடம் இருந்து விடுபட்டு வரவே எனக்கு முழுதாக இரண்டு வருடம் (2020 ஜனவரி முதல் 2021 டிசம்பர் வரை ) தேவைப்பட்டிருக்கிறது. 🙈😜

ஆனால் சந்தோஷம்! இந்த இரண்டு வருடத்தில் முற்றிலும் திறன்பேசி இல்லாமல் வாழ்வதற்கான அனைத்து மாற்றுவழிகளையும் மேற்கொண்டதில், வரயிருக்கும் காலங்களில் எனக்கு அதிக நேரம் கிடைக்கும், அதை எனக்கும் மற்றவர்களுக்கும் பயனுள்ள வகையில் உபயோகித்துக்கொள்வேன் என்பதுடன், திறன்பேசி செயலிகள் மூலம் என்னை யாரோ பின்தொடர்வதுபோல் இருந்த ஒரு நெருடலில் இருந்து வெளியாகிவிட்டேன் என்பதில் அளவில்லா ஆனந்தம்.

2022 ம் ஆண்டு, என்னதான் ஒமிக்கிறான் மற்றும் இதர இயற்கை பேரழிவுகள் நிகழும் என்கிற மீடியாக்கள் மற்றும் அரசாங்கத்தின் அச்சுறுத்தல் இருந்தாலும், நம்பிக்கையும் முயற்சியும் இருக்கும், என்னைபோல் இதுவும் கடந்து போகும் என்று வாழும் மனிதர்களுக்கு மிகவும் அற்புதமான ஆண்டாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த செட்டியார் மேட்ரிமோனி தளத்தில் உறுப்பினராக இருக்கும் என் பாசமிகு உறவின பெருமக்களே!, உங்கள் அனைவருக்கும் இனிய 2022 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இதுநாள் வரை நீங்கள் அளித்து வந்த நல்லாதரவிர்க்கு மனமார்ந்த நன்றிகள் பல!. உங்களை மே 2022 ல், சந்திக்கிறேன். தொடர்ந்து இணைந்திருங்கள் !🙏😇

ஏற்கனவே வரன் பதிவு செய்த அனைவருக்கும் இந்த குருபெயற்சிக்குள்ளாகவே , வெகுவிரைவில் விருப்பம்போல் திருமண வாழ்க்கை அமைய என்னுடைய பிராத்தனைகள் நிச்சயம் இருக்கும். 😊👍

1 comment

Hi everyone
I AM RAGAVENDRAN FROM MADURAI

I am looking for bride for marriage
If any of you are interested

Or share this with anyone you know

I only prefer people within Madurai district
contact no 9488562991
thank you