நான் இங்கு புதிய பதிவுகள் செய்யவில்லை என்றாலும், ஏற்கனவே பதிவு செய்தவர்கள் என்னை தினமும் தொடர்புகொண்டு சில பொருத்தமான பெண் ஜாதகத்தின் தகவல்களை கேட்டறிந்து வருகின்றனர். ஆனால் ஒருசிலர் ஏற்கனவே பதிவு செய்திருக்கும் வரன்களை பார்வையிடாமல், புதிய பதிவுகளுக்கு காத்திருக்கின்றனர். அதுதான் ஏன் என்று புரியவில்லை. ஏற்கனவே பதிவு செய்த வரன் (ஆண்), வது(பெண்)க்களுக்கே எதும் திருமண பேச்சுவார்தை தொடங்கியதா என்று தெரியவில்லை.

ஒருசிலர் எந்த வித சுய முயற்சியும் எடுக்காமல், அவரவர் பிள்ளைகளுக்கு நானே தேடி தேடி பொருத்தம் பார்த்து, தனியாக அவர்களுக்கு எடுத்து அனுப்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இது எப்படி சாத்தியம். நான் ஒருவனே பதிவும் செய்து, பொருத்தமும் பார்த்து, ஒவ்வொருவருக்காக தனியாக தேடி, பேசி, அனுப்பி கொண்டிருந்தால், இதர பணிகளை எவ்வாறு மேற்கொள்ள முடியும் என்னால். உங்கள் பிள்ளைகளுக்கு, பொருத்தமான வரன்களை நீங்களே தேடிக்கொள்ள, ஏன் பொருத்தம் பார்க்கும் நட்சத்திரம் சார்ட் கூட இங்கே பதிவு செய்திருக்கிறேன்.மேலும் இந்த சேவையை எளிமைபடுத்தும் வசதிகளை தான் பின்புலத்தில் என்னால் ஏற்படுத்தி கொடுக்க முடியும். மற்றவை உங்கள் கையில்😁

Comments

Be the first to add a comment