என்னுடைய செயல்களை copy அடித்து சொந்த புத்தி சுய அறிவு என்பது கொஞ்சம்கூட இல்லாமல், அடுத்தவர் முதுகில் (உழைப்பில்) பயணிக்க நினைக்கும் பல நபர்கள் உண்டு, அதனால் சில தவறான, ஒரே பேர் கொண்ட குழு அல்லது சேனல்களில் நீங்கள் இணைந்து உங்களுடைய தகவல்களை, மற்றவர்கள் தவறாக பயன்படுத்தும் வகையில், அவர்களது வலையில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்பதை உங்களுக்கு தெரிவிக்கவே இந்த பதிவு.
நமது இந்த @ChettiarMatrimony சேனலானது 2017 ல் டெலிகிராமில் ரெஜிஸ்டர் ஆனது.மேற்கண்ட படத்தில் கண்பதுபோல் பல போலி கணக்குகளை உருவாக்கி, கூட்டம் சேர்ப்பதற்காக, தானும் உருப்படியாக சமுதாயத்திற்கு எதுவும் செய்யாமல், மற்றவர்கள் செய்ய நினைப்பதிலும் இது போன்ற ஈன செயல்களை செய்து பிழைத்து வருகின்றனர்.
மேலும் சிலர், நமது இந்த சேனலில் இணைந்து, நான் பதிவு செய்யும் வரன்களின் தொடர்பு எண்களை எடுத்து, தாங்கள் திருமண தகவல் மையம் வைத்திருக்கிறோம், உங்கள் ஜாதகத்தை எங்களிடம் பதிவு செய்யுங்கள். சீக்கிரம் வரன் அமைத்து தருகிறோம் அதற்கு பணம் அனுப்புங்கள் என்று ஃபோன் செய்து பேசுகின்றனராம்.
இப்படி நீங்கள் யாரை நம்பியும் பணம் கொடுத்தோ, உங்கள் தகவல்களை கொடுத்தோ ஏமாற வேண்டாம்.